
மதுரை விளாச்சேரியில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் வழிமுறைகள்




முஹல்லா தெருக்களிலிருந்து உலகின் ஆகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களையும் சர்வதேச சட்ட வல்லுநர்களையும் உருவாக்கும் வழிமுறைகள் குறித்த பயிலரங்கம் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.
மதுரை விளாச்சேரியில் ” நெருக்கடியான காலத்தில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் வழிமுறைகள் ” குறித்து கல்வியாளர்கள் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
முஹல்லா மக்களை அதிகாரப்படுத்துவதில் தொலைநோக்கு இலக்குடன் இயங்கும் விளாச்சேரி நூருல் ஹுதா அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


