
உம்மத்தில் அறிவும் ஆற்றலும் கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எந்த தயக்கத்தையும் சுணக்கத்தையும் காட்டமாட்டார்கள்.


உம்மத்தில் அறிவும் ஆற்றலும் கொடுக்கப்பட்டவர்கள் தங்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எந்த தயக்கத்தையும் சுணக்கத்தையும் காட்டமாட்டார்கள்.
முஸ்லிம்களின் பின்னடைவுகளை மட்டும் கூறிக்கொண்டு எந்த தீர்வையும் முன்வைக்காது புலம்புவதிலேயே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கவும் மாட்டார்கள்.
தங்களால் என்ன முடியுமோ எவ்வளவு வளங்கள் வசதி வாய்ப்புகள் இருக்கின்றனவோ அதைக் கொண்டு உம்மத்தில் எந்த பாகுபாடும் காட்டாமல் இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருப்பார்கள்.
அதுபோன்ற ஒரு சிறப்பான பணியினை கோவை அர்ரஹ்மான் அகாடமியின் பொறுப்பாளர்கள் மிகச்சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர்.
தொலைநோக்கு இலக்கு நிர்ணயித்துக் கொண்டு சமூகக் களத்தில் தொடர்ச்சியாக இயங்குவது ஒரு இபாதத்.அல்லாஹ்வை மகிழ்விக்கக் கூடிய அழகிய இபாதத்.
அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
மாலைநேர வகுப்பில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு கோவை முஸ்லிம்களின் நாளைய ஆற்றலும் அடையாளங்களும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உரையாற்றினேன்.


