
கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் அதனைச் சுற்றி வாழும் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் Tamil Muslim Nanbargal Organisation.


கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் அதனைச் சுற்றி வாழும் தமிழக முஸ்லிம் குடும்பங்கள் அங்கம் வகிக்கும் Tamil Muslim Nanbargal Organisation என்ற அமைப்பின் சார்பில் குடும்பங்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
நவம்பர் 1 ஞாயிறு அன்று நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
” உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி ஆராய்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான் சொல்வதை அப்படியே பின்பற்றுங்கள்.
உலகின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வழிநடத்திச் செல்லும் ஆளுமைகளாக முஸ்லிம் பிள்ளைகள் உருவாக வேண்டும்.
மனித சமூகத்தில் முஸ்லிம்கள் ஆற்றல்மிக்கவர்களாகவே எல்லா காலத்திலும் இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
அனைத்து வகைகளிலும் தங்களை ஆற்றல்படுத்திக் கொள்வதும்,வாழும் நிலத்தில் வல்லமை மிக்கவர்களாக வாழ்வதும் அல்லாஹ்வுக்கு செய்யும் அழகிய இபாதத்களில் ஒன்று.
வளரும் தலைமுறையை ஆன்மிகத்தைக் கொண்டும் அறிவியலைக் கொண்டும் ஆற்றல்படுத்துவோம்.”
………என்பதே எனது உரையின் உள்ளடக்கமாக இருந்தது.
காயல்பட்டினம் குடும்பங்கள் அதிகமாக வாழும் கோட்டயத்தில் கல்வி மருத்துவம் தொழில் என்று பல்வேறு சேவைகளை இந்த அமைப்பு மிகுந்த சமூகப் பொறுப்புடன் முன்னெடுத்து வருகிறது.
ஊரின் மீதும் முஸ்லிம் உம்மத்தின் மீதும் அக்கறையுள்ளவர்கள் இப்படித்தான் தங்களது சமூகப் பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவார்கள்.


